தொடுவானம் தொடுகின்ற நேரம்

தொடுவானம் தொடுகின்ற நேரம்  
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்  
தொடு வானமாய் பக்கமாகிறாய்  
தொடும் போதிலே தொலைவாகிறாய்   (தொடுவானம்)
  
இதயத்திலே தீ பிடிக்க கனவெல்லாம் கருகியதே  
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ  
இலைமேலே பனித்துளிபோல் இங்குமங்குமாய்  
உலவுகின்றோம்  
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே  
  
வலியென்றால் காதலின் வலிதான்  
வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது  
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்  
வான் நீளத்தில் என்னை புதைக்கிறேன்   (இதயத்திலே)
  
காதல் என்னை பிழிகிறதே  
கண்ணீர் நதியாய் வழிகிறதே  
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை  
வாழ்வே வலிக்கிறதே  
காற்றில் தொலைந்த மழைத்துளி போல்  
கண்ணே நீயும் தொலைந்ததென்ன  
நீரினை தேடும் வேரினை போல  
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்  
கண்கள் ரெண்டும் மூடும் போது  
நூறு வண்ணம் தோன்றிடுதே  
மீண்டும் கண்கள் பார்க்கும் போது  
லோகம் சூன்யம் ஆகுதே  
  
சிறுபொழுது பிரிந்ததற்கே  
பலபொழுது கதறிவிட்டாய்  
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ 

No comments